ஆரல்வாய்மொழி, ஏப்.21: ஆரல்வாய்மொழியில் முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
ஆரல்வாய்மொழி வடக்கு பெருமாள்புரம் மாரியம்மன் கோயில் கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (61). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி பகவதியம்மாள். தம்பதிக்கு சுப்ரமணியன் என்ற மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி அருணா என்ற மனைவி உள்ளார். சுப்ரமணியன் மும்பையில் பணிபுரிந்து வருகிறார். இதனால் ெபருமாள்புரம் வீட்டில் ஆறுமுகம், பகவதியம்மாள் மற்றும் அருணா ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 1ம் தேதி சுப்ரமணியனை பார்க்க 3 பேரும் மும்பை சென்றுள்ளனர்.
அவர்கள் நேற்று காலை ஊருக்கு திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் சாத்தப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தவர்கள் உள்ளே ெசன்று பார்த்தனர். அப்போது உள்பக்க கதவும் உடைக்கப்பட்டிருந்தது. இது தவிர படுக்ைக அறையில் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோ லாக்கரில் இருந்த ₹23 ஆயிரம், 2 கம்மல்கள், 3 மோதிரங்கள் உள்ளிட்ட நகைகளும் மாயமாகி இருந்தன. இது தொடர்பாக ஆறுமுகம் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.கொள்ளை நடந்த வீடு ஆரல்வாய்மொழி சந்திப்புக்கு மிக அருகில் உள்ளது. இது ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்புகள் நிறைந்த பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதிகளில் ஆட்கள் இல்லாத வீடுகளை குறிவைத்து, மர்மநபர்கள் ெகாள்ளையடித்து வருவது அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.