சத்துணவு, அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியர் சங்கம் பெருந்திரள் முறையீடு

நாகர்கோவில், ஏப்.20: ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று இறுதி மாத ஊதியத்தில் 50 சதவீதம் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். பிரிவு வாரியாக வரையறுக்கப்பட்ட முறையான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.  இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். 2015ம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு தேக்கநிலை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் பிற துறைகளில் பதவி உயர்வில் சென்று ஓய்வு பெற்றவர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலி தட்டேந்தி பெருந்திரள் முறையீடு நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஈசாக்கு தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ராமச்சந்திரன், ராபர்ட் தங்கம், லட்சுமி, எமல்த், சரோஜினி, கவுரி அம்மாள், நிர்மலா பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் லூக்காஸ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.  மாநிலத் தலைவர் ராமமூர்த்தி கலந்து கொண்டு பேசினார். மாவட்ட துணைத்தலைவர் பபியானா நன்றி கூறினார்.

Related Stories: