பண்ருட்டி, மார்ச் 26: பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் பண்ருட்டி, நெய்வேலி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி இயங்கி வருகிறது. இரு தொகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அரசு நலத்திட்டங்கள், பட்டா, மற்றும் வருவாய்துறை சான்றுகள் ஆகியவை பெறுவதற்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் வட்டாட்சியர் அலுவலகத்தின் தரை தளத்தில் வட்டாட்சியர் அறை, நில அளவைத்துறை, ஆவண பாதுகாப்பகம், இ.சேவை மையம், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அலுவலக பிரிவுகள் அமைந்துள்ளன. முதல் தளத்தில் குடிமைபொருள் வழங்கல்துறை, சமூகநலத்துறை அலுவலகங்களும், ஆதார் பிரிவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரிவுகள் இயங்கி வருகின்றன.