போடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் தீ

போடி, மார்ச் 8: தேனி மாவட்டம், போடி அருகே, சிலமலைக்கும் ராசிங்காபுரம் இடையே உள்ள ஒண்டிவீரப்ப சுவாமி கோயில் மலை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில், பல்வேறு இடங்களில் நேற்று இரவு 7 மணிக்கு மேல் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது.

இதனால், வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள் இடம் பெயர்கின்றன. அரிய வகை மரங்களும், மூலிகைச் செடிகளும் எரிந்து நாசமாகின்றன. வனத்துறையினரின் கண்காணிப்பு குறைவால், வனப்பகுதியில் உள்ள மரங்களில் சமூக விரோதிகள் தீ வைத்து அடுப்புக் கரிக்கு தயார் செய்கின்றனர்.

மேலும், அடர்த்தியான வனப்பகுதிகளில் கஞ்சா பயிரிடுவதாக வன ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் எரியும் தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கோடை காலங்களில் வனப்பகுதியில் தீப்பற்றுவதை தடுக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: