முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் 1800 பேருக்கு காலை, மதியம் உணவு கே.ஆர்.ராஜூ ஏற்பாட்டில் வழங்கல்

நெல்லை, மார்ச் 2: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் காலை, மதியம் என 1,800 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, நெல் லை  மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல்வஹாப் எம்எல்ஏ வழிகாட்டுதலின் படி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.ராஜூ ஏற்பாட்டில் பாளை. அரசு மருத்துவமனை முன்புள்ள விநாயகர் கோயிலில் வைத்து காலை 600 பேருக்கும், மதியம் மருத்துவமனை வளாகத்தில் வைத்து 1,200 பேருக்கும் என மொத்தம் 1,800 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திமுக முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: