திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் பள்ளி பரிமாற்றத் திட்ட செயல்பாட்டு பணிகள்

திருத்துறைப்பூண்டி, பிப்.24: திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் பள்ளி பரிமாற்றத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி கிராமப்புற மாணவர்கள் நகர்ப்புற பள்ளிகளுடன் இணைந்து கற்க வைப்பதை நோக்கமாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பரிமாற்ற பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி இணைப்பு பள்ளியில் உள்ள வசதிகள் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் மற்றும் களப்பயணம் பள்ளியை சுற்றி உள்ள வளங்கள் பல்வேறு இயற்கைச் சூழல்கள் அலுவலகங்கள் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை பார்த்து புதிய அனுபவங்களை பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கொரானா பெருந்தொற்று காரணமாக இத்திட்டத்தினை இணைய வழியில் செயல்படுத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் உள்ள 23 அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள் அனைத்தும் ஒன்றியத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைந்து பரிமாற்ற திட்ட செயல்பாட்டு பணிகளை மேற்கொண்டனர். இதில் பள்ளிகளில் பணிபுரியும் இரு ஆசிரியர்கள் மட்டும் மாற்றம் செய்து கொண்டு ஒதுக்கீடு செய்த பள்ளிகளுக்கு சென்று பாடங்களைக் கற்பித்து மாணவர்களுடன் கலந்துரையாடினர். இந்நிகழ்வினை சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தலைமை ஏற்று துவக்கி வைத்தனர். வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்தண்ணா ஆசிரியர் பயிற்றுநர்கள் அனுப்ரியா, பாஸ்கர், கங்கா, ராஜபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: