பாபநாசத்தில் கிராம உதவியாளர் சங்க வட்ட செயற்குழு கூட்டம்

கும்பகோணம், பிப்.24: தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தின் பாபநாசம் வட்ட செயற்குழு கூட்டம் சங்க கட்டிட வளாகத்தில் நடைபெற்றது. பாபநாசம் வட்ட தலைவர் சோம.பாஸ்கரன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் மனோகரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் கார்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், சென்னையில் எழிலகத்தில் அமைந்துள்ள மாநில வருவாய்த்துறை அலுவலகம் முன்பு வருகிற மார்ச் 10ம் தேதி அன்று மீண்டும் சிபிஎஸ் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் கலந்து கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பாபநாசம் வட்ட துணைத்தலைவர் சக்திவேல், வட்ட துணைச் செயலாளர் விக்டோரியா மேரி, சரக அமைப்பாளர்கள் சுப்பிரமணியன், ரமேஷ், ஐயப்பன், உமா, ஜவகர் பாட்ஷா, மணிகண்டன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பாபநாசம் வட்ட பொருளாளர் மணி நன்றி கூறினார்.

Related Stories: