முனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி, பிப்.22: கிருஷ்ணகிரி அடுத்த ஆத்துக்காவாய் அருகில் அமைந்துள்ள முனீஸ்வரர் கோயில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், கோ பூஜை, நவகிரக சாந்தி தீபாராதனையும், காலை 11 மணிக்கு, சுவாமி கரிகோலம் நிகழ்ச்சி, இரண்டாம் கால யாக பூஜை, வாஸ்து சாந்தி மற்றும் முனீஸ்வரர் மூலமந்திர ஹோமம், சுவாமி பிரதிஷ்டை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு சந்தனம், குங்குமம், பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 1 மாநகராட்சி, 1 நகராட்சி, 6 பேரூராட்சி தேர்தல் முடிவு 4 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை

Related Stories: