தருவைக்குளம் ஆலய திருவிழாவில் நிக்கோலாசியார் சப்பர பவனி

குளத்தூர், பிப். 10:  தருவைகுளம் ஆலய திருவிழாவில் நிக்கோலாசியார் சப்பர பவனி நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். குளத்தூரை அடுத்துள்ள தருவைகுளம் புனித நிக்கோலாசியார் ஆலய திருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழாவில் தினமும் காலை, மாலையில் திருப்பவனி, ஜெபமாலை, ஆராதனை, மறையுரை, நற்கருணை ஆசீர்வாத நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் 10ம் நாளான நேற்று காலை சிறப்பு ஆடம்பர கூட்டுத்திருப்பலி, ஆராதனைகளும், தொடர்ந்து சப்பர பவனியும் நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளானோர் கலந்து கொண்டு, அச்சுவெல்லம், உப்பு, மிளகு, மெழுகுவர்த்தி போன்றவற்றை நேர்த்திக்கடன் மற்றும் காணிக்கைகளாக செலுத்தி வழிபட்டனர். ஏற்பாடுகளை பங்குதந்தை அந்தோணி மைக்கிள் வின்சென்ட் மற்றும் ஆலய கட்டளைக்கரார்கள் செய்திருந்தனர்.

Related Stories: