பாபநாசம் இரட்டை பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணம், பிப்.8: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் வடக்கு வீதியில் இரட்டை பிள்ளையார் என்கிற தாமோதர விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் நாள் கணபதி ஹோமத்துடன் கஜபூஜை உட்பட கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கியது. மாலையில் முதல் கால யாகசாலை பூஜையும், இரண்டாவது நாள் காலையிலும் மாலையிலும் இரண்டாம் கால யாகசாலை பூஜையும் பூர்ணாஹீதி தீபாராதனையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மூன்றாம் கால பூஜையும், பூர்ணாஹீதி தீபாராதனையும் நடைபெற்று, கடம் புறப்பட்டு விமான கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலஸ்தான கும்பாபிஷேகம், மகா அபிஷேகம் நடைபெற்று அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. யாகசாலை பூஜை காலங்களில் வேத பாராயணமும், திருமுறைப் பாராயணமும், உபன்யாசங்கள் மற்றும் நாதஸ்வர இன்னிசை கச்சேரிகளுடன் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Related Stories: