திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டம்

கிருஷ்ணகிரி, ஜன.29: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர், செயலாளர்கள் கூட்டம், மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான செங்குட்டுவன் தலைமையில் நேற்று நடந்தது. முன்னாள் எம்பி சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் மதியழகன் எம்எல்ஏ., துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகள், பர்கூர், ஊத்தங்கரை, நாகோஜனஅள்ளி, காவேரிப்பட்டணம் ஆகிய 4 பேரூராட்சிகளில் உள்ள தலா 15 வார்டுகள் என மொத்தம் உள்ள 93 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வது, கூட்டணி கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், திமுக மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன்,

பொதுக்குழு உறுப்பினர் ராஜன், நகர செயலாளர் நவாப், நிர்வாகிகள் கடலரசு மூர்த்தி, அஸ்லாம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் நடராஜன், ஜேசுதுரைராஜ், அக.கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுக சுப்பிரமணியன், தளபதி ரகமத்துல்லா, முபாரக், அப்சல், அயோத்தி, விசிக மாவட்ட செயலாளர் கனியமுதன், தியாகு, திராவிட ராஜா, மதிமுக மாவட்ட செயலாளர் பாலமுரளி, இளங்கோ, பாண்டியன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் நஞ்சுண்டன், தமுமுக மாவட்ட தலைவர் நூர்முகமத், முஸ்லிம் லீக் உமர்அலி, தவாக பாரதி ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, கிழக்கு மாவட்ட திமுகவின் அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமையில் நடந்தது. இதில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெற செய்து, மாவட்டத்தை திமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: