×

முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய 106 பேர் மீது வழக்கு

கடலூர், ஜன. 25: கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய 106 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 10 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 54 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து 1500க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் கடலூர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியில் சுற்றித்திரிந்த 106 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags :
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 55...