மதுரை: மதுரை மாவட்டத்தின் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி பணியில் நபார்டு வங்கி முக்கிய பங்கு வகிக்கிறது. மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வேளாண் வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து, அதன் மூலம் வரும் நிதியாண்டிற்கு(2022-23) ரூ.13,966.72 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை நேற்று மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டார். நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் சக்திபாலன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அனில், வளர்ச்சி அதிகாரி தமிழ் செல்வன், ரிசர்வ் வங்கிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் அனீஷ் சேகர் பேசும்போது, ‘‘விவசாயத்தில் நீண்ட கால கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இத்திட்டத்தில் உள்ளது. இதுபோன்ற கடன் வசதிகள் விவசாயத்தின் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்க உதவும். விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட உதவும். வேளாண்மையில் இயந்திரமயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்த வேண்டும். கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செயல்படுத்த தீவிரப்படுத்த வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும். வங்கிகள் மேலும் இதுபோன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்’’ என்றார். நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சக்தி பாலன் பேசுகையில், ‘‘இக்கடன் திட்ட அறிக்கை, பல அரசு துறைகள், வங்கிகள், மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ’ என்று கேட்டுக்கொண்டார்.