பிறைகுடியிருப்பு கல்லூரியில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு கருத்தரங்கு

உடன்குடி, டிச. 30: உடன்குடி அருகே பிறைகுடியிருப்பு கல்வியியல் கல்லூரியில் மெஞ்ஞானபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமை வகித்து மக்கள் தொகை பெருக்கத்தால் பூமிக்கு ஏற்படும் பாதிப்புகள், சமுதாயத்தில் ஏற்படும் விளைவுகள், குடும்ப நல சிகிச்சைகள் குறித்து பேசினார். கல்லூரி முதல்வர் மாரியப்பன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சேதுகுற்றாலம், சுகாதார ஆய்வாளர் சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார புள்ளியியல் மேற்பார்வையாளர் தீபக்ராம் நன்றி கூறினார். போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ஆற்றுப்படுத்துநர் சங்கர், சிகிச்சை மேற்பார் வையாளர் பார்த்திபன் செய்திருந்தனர்.

Related Stories: