பென்னாகரத்தில் தொமுச அலுவலகம் திறப்பு விழா

பென்னாகரம், டிச.28: பென்னாகரம் அரசு போக்குவரத்து பணிமனையில் தொமுச அலுவலகம் திறப்பு விழா நடந்தது. பென்னாகரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், தொமுச அலுவலகம் திறப்பு விழா தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பணிமனை செயலாளர் வெற்றிவேல் வரவேற்றார். தொமுச சிறப்பு தலைவரும், கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளருமான செங்குட்டுவன், தர்மபுரி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி, தொமுச பேரவை செயலாளர் கிருஷ்ணன், தர்மபுரி தொமுச தலைவர் சின்னசாமி, பொருளாளர் சேகர், செயலாளர் நாகராஜ் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட கவுன்சிலர் ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் காளியப்பன், துரைசாமி, பென்னாகரம் பேரூர் செயலாளர் வீரமணி, ஆசிரியர் முனியப்பன், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சென்னையன், தொழில் நுட்ப அணி அமைப்பாளர் கார்த்திக், தாரணி சில்க்ஸ் கமலேசன், வினுஅன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பணிமனை பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Related Stories: