நீடாமங்கலம்,டிச.23: நீடாமங்கலம் வட்டார விவசாயிகளுக்கு வேளாண் துறையின் சார்பாக உள் மாநில கண்டுணர்வு சுற்றுலா ஆத்மா திட்டத்தில் வம்பன் ஆராய்ச்சி மையத்திற்கு அழைத்து சென்றனர். இதில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.வட்டார தொழில்நுட்ப மேலாளர் வைரமுத்து மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் அருள்செல்வி மற்றும் விவேக் ஆகியோர் அழைத்து சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் ஆராய்ச்சி மையத்தில் பயறுவகைப் பயிர்களில் அதிக மகசூல் பெற நீடாமங்கலம் வட்டார விவசாயிகள் என்னென்ன ரகத்தை தேர்வு செய்வது எப்படி விதை நேர்த்தி செய்வது எப்படி விதைப்பது எந்த பருவத்தில் விதைப்பது போன்ற முக்கியமான வகுப்புகளை உதவி பேராசிரியர்கள் ராமகிருஷ்ணன்,ராஜா ரமேஷ் பயறு வகைப் பயிரை தாக்கக்கூடிய காய் புழுக்களை கட்டுப்படுத்துவது எப்படி என்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த பொறிகள் வைப்பது குறித்து விளக்கம் அளித்தனர். சாகுபடி செய்து வரும் நிலத்தில் மண் ஆய்வு செய்வது எப்படி மண் ஆய்வு செய்வதன் பயன்கள் மண் ஆய்விற்கு மண் மாதிரிகள் எடுக்கும் விதம் அங்கக வேளாண்மை அங்கக வேளாண்மை போன்றவை பற்றி உதவிப்பேராசிரியர் சுகன்யா விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். மேலும் களை விதைகள் பரவும் விதம் களைகளை எப்படி கட்டுப்படுத்துவது களைகளினால் ஏற்படும் மகசூல் இழப்பு களை முளைத்த பிறகு கட்டுப்படுத்துவது எப்படி என்று விவசாயிகளுக்கு விரிவாக உதவிப்பேராசிரியர் மாரிமுத்து எடுத்துக் கூறினார்.