பொதுமக்கள் மகிழ்ச்சி கடமலை-மயிலை ஒன்றியத்தில் விளைச்சல் அதிகரிப்பால் தேங்காய்க்கு விலை இல்லை

வருசநாடு, டிச. 8: கடமலை-மயிலை ஒன்றியத்தில் விளைச்சல் அதிகரிப்பால் தேங்காய்க்கு விலை குறைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.  கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, தங்கம்மாள்புரம், சிங்கராஜபுரம், தர்மராஜபுரம், வைகை நகர், குமணன்தொழு, உப்புத்துறை ஆகிய பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னந்தோப்புகள் உள்ளன. இந்நிலையில், இந்தாண்டு அடிக்கடி பெய்த மழையால் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், தேங்காய் வரத்து அதிகரித்து காய் ஒன்றின் விலை ரூ.0 முதல்  வரை விற்கிறது. மேலும், தேங்காய் கொள்முதலுக்கு மொத்த வியாபாரிகளும், சில்லறை வியாபாரிகளும் வருவதில்லை என கூறுகின்றனர்.

இதனால், தேங்காய்களை தோப்புகளில் இருப்பு வைத்துள்ளனர். இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.  இது குறித்து வருசநாடு விவசாயி ரமேஷ் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் பெய்த தொடர்மழையால், தென்னந்தோப்புகளில் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால், தேங்காய் வரத்தும் அதிகரித்து விலை குறைந்துள்ளது. எனவே, தேங்காய்க்கு நிர்ணய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.  இது குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கூறுகையில், ‘கடந்த வாரம் ஒரு டன் தேங்காய் ரூ.30 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது. தற்போது ஒரு டன் தேங்காய் ரூ.28 ஆயிரமாக குறைந்துள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தேங்காய்க்கு நிர்ணய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: