போடி அருகே மீனாட்சிபுரத்தில் 60 குடியிருப்புகளுக்கு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை: அதிகாரிகளுடன் தங்கதமிழ்ச்செல்வன் ஆய்வு

போடி, டிச. 5: போடி அருகே, 60 குடியிருப்புகளுக்கு பட்டா வழங்குவதற்காக, அப்பகுதியில் தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். போடி அருகே, மீனாட்சிபுரம் பேரூராட்சியில் 0 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த ஊரில் உள்ள மெயின்ரோட்டில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மூன்று தலைமுறையாக பட்டா இல்லை என கூறப்படுகிறது. இது குறித்து கடந்த அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

மேலும், மாவட்ட அளவிலான வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தும் நடவடிக்கை இல்லை எனகூறப்படுகிறது. இதனால், 60 குடியிருப்புகளுக்கு பட்டா கிடைக்காமல், பொதுமக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில், தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வனை, 60 குடியிருப்பை சேர்ந்தவர்களும் நேரில் சந்தித்து, பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மீனாட்சிபுரம் மெயின் ரோட்டில் 60 வீடுகள் இருக்கும் பகுதியை தங்கத்தமிழ்ச்செல்வன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

இது குறித்து தங்கதமிழ்ச்செல்வன் கூறுகையில், ‘போடி தாசில்தாரிடம் வரையறை செய்து, மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்து, பட்டா வழங்குவதற்கு ஆவண செய்யப்படும். தேவைப்பட்டால் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று 00 வருட பிரச்னைக்கு நிச்சயமாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார். பெரியகுளம் எம்.எல்.ஏ சரவணக்குமார், பேரூர் கழக செயலாளர் குருசாமி, வருவாய்துறை ஆர்ஐ சுந்தரராஜ், கிராம நிர்வாக அதிகாரி ஆனந்தகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: