கம்பத்தில் பூங்கா அமைப்பதற்கு பூமிபூஜை கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கம்பம், டிச.10: கம்பம் நகராட்சி 32வது வார்டில் உள்ள நந்தகோபால சுவாமி நகர்பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,  பூங்கா, சிறுவர்கள் விளையாட்டு திடல் மற்றும் நடைபயிற்சி  தளம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையும், தொடக்கவிழாவும் நடைபெற்றது.

கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் பூமிபூஜையில் கல்ந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்து பேசுகையில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.81 லட்சம் மதிப்பில் பூங்கா மற்றும் விளையாட்டு திடல், நடைபயிற்சி தளம் நவீன முறையில் அமைக்கப்பட உள்ளது. இங்கு கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்படுகிறது. பூங்காக்கள் உருவாக்கும் திட்டத்தில் செல்லும் இடங்களில் அரசமரம் வைப்பது எனது வழக்கம். இந்த நந்த கோபாலசாமி நகர் பூங்காவிலும் அரச மரக்கன்று நட்டு உள்ளேன். இப்பகுதி மக்களுக்காக உருவாக்கப்படும் இதை மக்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர்கள் வக்கீல் துரைநெப்போலியன், சூர்யா செல்வகுமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் குரு இளங்கோ, நகராட்சி மேலாளர் புஷ்பலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: