நாகூர் கொல்லம் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்

நாகை, டிச.9: நாகூர் கொல்லம் ரயிலை தென்னக ரயில்வே மீண்டும் இயக்க வேண்டும் என இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.நாகை மாவட்ட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர்களின் கூட்டம் நாகூரில் நடந்தது. மாவட்ட தலைவர் செய்யதுஅலி தலைமை வகித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த சிறைவாசிகள் விடுதலையில் நீண்டகாலமாக சிறையில் இருந்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும். இடைநிறுத்தம் செய்யப்பட்ட நாகூர் கொல்லம் விரைவு ரயிலை மீண்டும் இயக்க தென்னக ரயில்வே பொது மேலாளரை கேட்டு கொள்ளுவது. அதற்கான நடவடிக்கையை நாகை எம்பி செல்வராசு மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு, பாண்டிச்சேரி, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் வசித்து வரும், இஸ்லாமியர்கள் ஹஜ் யாத்திரைக்கு சென்னையிலிருந்து விமானம் மூலமாக சென்றனர். இதை ரத்து செய்து தற்போது கொச்சின் மூலமாக ஹஜ் யாத்திரை செல்லும் நிலையை மாற்றப்பட்டுள்ளதை நீக்கி மீண்டும் சென்னையிலிருந்து செல்லும் நிலையை உருவாக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செயலாளர் அன்வர்பாட்சா, மாவட்ட பொருளாளர் சாகுல்ஹமீது, துணை தலைவர் அப்துல் காதர், துணை செயலாளர் பாரூக், மாநில துணை செயலாளர் ஜமால்முகமது இப்ராகிம், மாநில துணைச் செயலாளர், மாநில செயலாளர் ஷாஜஹான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: