அம்பேத்கருக்கு மரியாதை

திண்டுக்கல், டிச. 7: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் 65வது நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.  கலெக்டர் விசாகன் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேசியதாவது.‘அம்பேத்கர் இல்லாவிட்டால் நமக்கு ஒரு அருமையான சட்ட புத்தகம் கிடைத்திருக்காது. இந்திய அரசியலமைப்புக்கு ஆணிவேராக இருந்தவர் அம்பேத்கர். அவர் நினைவு நாளில் ஜனநாயகம் காக்கவும், அனைத்து தரப்பு மக்களும் நலம் பெறவும் நம் சபதம் ஏற்க வேண்டும்’ என்றார்.

Related Stories:

More