காரைக்குடி, டிச.4: காரைக்குடியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் காந்திமதி தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் ஞானம், தாலுகா தலைவர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சண்முகப்பிரியா துவக்கி வைத்தார். மாநில செயலாளர் பொன்னுத்தாய் பேசினார்.