×

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு துப்பாக்கியுடன் ராணுவத்தினர் பாதுகாப்பு

திருப்பூர், ஏப். 19: திருப்பூர் வாக்கு எண்ணிக்கை மையமான எல்ஆர்ஜி அரசு கலை கல்லூரியில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் கடந்த 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்ட மன்றதொகுதிகளில் பதிவான வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணிக்கை மையமான  பல்லடம் ரோட்டில் உள்ள எல்ஆர்ஜி அரசு கலை கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகளுக்கு துப்பாக்கி ஏந்திய ராணுவ படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்பவர்களின் விவரங்களை சேகரித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அங்கு வரும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.

Tags :
× RELATED கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை