தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 5 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்து வருகின்றனர். அதன்படி ஒரு கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட பல குற்ற  வழக்குகளும், ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவருமான சென்னை, பொத்தூர் பகுதியை சேர்ந்த சதிஷ்குமார் (32), சரித்திர பதிவேடு குற்றவாளி, ஒரு கொலை வழக்கு உட்பட பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய பொன்னேரி பகுதியை சேர்ந்த பரத் (24), கொலை வழக்கு உட்பட பல குற்ற  வழக்குகள், ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட மதுரவாயல் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (எ) அறுப்பு சீனு (34), சரித்திர பதிவேடு குற்றவாளி, ஒரு  கொலை வழக்கு உட்பட பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய, ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ராபர்ட் (எ) சின்ன ராபர்ட் (22), வழிப்பறி வழக்கில் தொடர்புடைய கணேஷ்குமார் (எ) கணேஷ் (29) ஆகிய 5 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories:

>