×

திருமானூர்அருகே கூரை வீடு எரிந்து சேதம்

அரியலூர்,ஏப்.17: அரியலூர் மாவட்டம், அன்னிமங்கலம் ஊராட்சி பாளையப்பாடி கிராமம் தெற்கு காலனி தெருவை சேர்ந்தவர் அய்யனார் (45), விவசாய கூலி தொழிலாளி. இவர் கூரை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் திருமானூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் மின்சாரம் விட்டுவிட்டு வந்ததால், அய்யனார் வீட்டின் முன் பக்கத்தில் படுத்திருந்துள்ளார். அவரது மனைவி தமயந்தி, மகன்கள் ராகுல், ராகவன், மகள் ரம்யா, கவியரசி ஆகியோர் வீட்டின் உள்ளே படுத்திருந்துள்ளனர். அப்போது இரவு சுமார் 11.30 மணியளவில், அவர் வீட்டில் இருந்த பிரிட்ஜில் ஏற்பட்ட மின்க சிவினால் பிரிட்ஜ் தீப்பிடித்து எரிந்தது.

அருகில் படுத்திருந்த அய்யனார் மகன் ராகவன் மீது தீசுட்டதில் உடன் ராகவன் எழுத்து பார்த்த போது பிரிட்ஜ் எரிவதை கண்டு வீட்டின் உள்ளே படுத்திருந்த அனைவரையும் எழுப்பிவிட்டு, வெளியில் படுத்திருந்த அவரது தந்தையையும் எழுப்பி வெளியே வந்து விட்டனர். நள்ளிரவு என்பதால் அருகிலிருந்தவர்களை கூப்பிடுவதற்குள் வீடு முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது. இந்த தீவிபத்தில், வீட்டில் இருந்த பிரிட்ஜ், கட்டில், பீரோ, பிரோவில் இருந்த பணம் ரூ.4,700, ஆதார்கார்டு, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மற்றும் அனைவரது துணிகளும், வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து சாம்பலாகிவிட்டது. நள்ளரவிலும், மழையிலும், மின்கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தில், அந்த குடும்பத்தில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக திருமானூர் போலீசார் விசாலணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Thirumanaur ,
× RELATED திருமானூர்அருகே புற்று மண் குளியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி