கொரோனா ஊரடங்கால் டீ வியாபாரத்தில் குதித்த இளைஞர்கள்

சென்னை: கொரோனா ஊரடங்கால் ஓட்டல் தொழில் முடங்கியதையடுத்து, பலர் டீ வியாபாரத்தில் இறங்கி சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, இளைஞர்கள் களத்தில் குதித்துவிட்டனர். கொரோனா ஊரடங்கால் கிட்டத்தட்ட கடந்த ஆண்டு முழுவதும் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டனர். இந்த ஆண்டும் கொரோனா மீண்டும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனாவால் வேலை இழந்த பலர், சம்பளப் பிடித்தத்தில் பாதிக்கப்பட்ட பலர் இப்போது வாழ்வாதாரத்தை எதிர்கொள்ள தயாராகியுள்ளனர். குறிப்பாக ஓட்டல் தொழிலை நம்பியிருந்தவர்கள் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் மாற்று தொழிலாக தற்போது டீ வியாபாரத்தை கையில் எடுத்துள்ளனர். காபியைவிட டீ அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் டீ வியாபாரம் நன்றாக உள்ளது என்று பலர் தெரிவித்துள்ளனர். பல இளைஞர்கள் சைக்கிளில் சென்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் டீ வியாபாரத்தை நடத்தி வருகின்றனர். ஒரு நாளைக்கு 300 டீ வரை விற்பனை செய்வதாக ஒரு இளைஞர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் பழைய மகாபலிபுரம் சாலையில் ரெஸ்டாரன்டுகளை நடத்திய பலர் கொரோனாவால் கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது, இந்த ரெஸ்டாரன்டுகளை மூடிவிட்டு மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களில் டீ வியாபாரத்தை தொடங்கியுள்ளனர்.

* முதலீடு குறைவு

டீ வியாபாரிகள் கூறுகையில், “சாதாரணமாக, ஒரு சிறிய வியாபாரத்தில் முதலீடு செய்ய வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் தேவை. அதன் மூலம் மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்கலாம். ஆனால், டீ வியாபாரம் அப்படியல்ல. முதலீடு குறைவு லாபமும் அதிகம்,” என்றனர்.

Related Stories: