உய்யவந்தம்மன் கோயில் திருவிழா

சாயல்குடி, ஏப்.10:  கடலாடி அருகே ஆ.புனவாசல் உய்யவந்தம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கணபதிஹோமம் மற்றும் யாகசாலைகள் வளர்க்கப்பட்டு விநாயகர், உய்யவந்த அம்மன், பத்திரகாளி, கருப்பசாமி சிலைகளுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 11 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தீப ஆராதனை நடந்தது.

திருவிழாவையொட்டி தினந்தோறும் பெண்கள் கும்மி அடித்தும், இளைஞர்கள் ஒயிலாட்டம் ஆடியும் உற்சாகமாக  கொண்டாடினர். இதில் பக்தர்கள் பொங்கலிட்டும், மாவிளக்கும் எடுத்தனர்.

நேற்று கோயில் நிர்வாகி செந்தூர்பாண்டியன் தலைமையில் பால்குடம் எடுத்து கிராமத்தை ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செலுத்தினர். குழந்தைகளுக்கு மொட்டையடித்தனர். பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: