அக்னி வெயிலுக்கு ஆறுதல் தர்பூசணி பழவிற்பனை சிவகாசியில் ஜோர்

சிவகாசி, ஏப். 9:  சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக அக்னி வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் நகரில் தர்பூசணி பழம் உட்பட இயற்கை குளிர்பானங்களின் விற்பனை களைகட்டியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பல இடங்களில் பருவமழை பெய்யாமல் பொய்த்து விட்டது. இதனால் விவசாயம் பொய்த்து போனதுடன் கண்மாய், ஊரணிகளில் நீர்வற்றியதாலும் ஆறுகளில் தண்ணீர் வரத்து இல்லாததாலும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை தொடங்கியதில் இருந்து சிவகாசி பகுதியில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளே இருந்து வருகின்றனர்.

கோடை வெப்பத்தை தணிப்பதற்கு பொதுமக்களின் கவனம் குளிர்ச்சியான இயற்கைப் பொருட்களின் மீது திரும்பியுள்ளது. தற்போது நகரில் இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட பொருட்களை ஆர்வத்துடன் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதில் தாகத்தை தீர்க்கும் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதனால் சிவகாசியில் பலபகுதிகளுக்கும் லாரிகளில் விற்பனைக்காக டன் கணக்கில் வரத் துவங்கியுள்ளது. சிவகாசியில் திருத்தங்கல் ரோடு, திருவில்லிபுத்தூர் ரோடு, சாத்தூர் ரோடு, பைபாஸ் ரோடு, திருத்தங்கல் உள்ளிட்ட பகுதிகளில் தர்ப்பூசணி கடைகள் முளைத்துள்ளன. இந்த வழியாக செல்லும் டூவீலர் மற்றும் நான்குசக்கர வாகனங்களில் வருவோர் இதை ருசி பார்த்து உடல் வெப்பத்தை தணிக்கின்றனர். தர்பூசணி பழங்களின் வரவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தர்பூசணி பழம் கிலோ ரூ.15 மற்றும் கிலோ ரூ.20க்கும் தனி பீஸ் இரண்டு எண்ணம் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகி–்ன்றது.

Related Stories: