மயிலாடுதுறை தொகுதி அமமுக வேட்பாளர் கோமல் அன்பரசன் கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை, ஏப். 4: மயிலாடுதுறை தொகுதி அமமுக வேட்பாளர் கோமல் அன்பரசன், மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய பகுதியான ஏனாதிமங்கலம், அருண்மொழித்தேவன், பில்லாளி, பொன்னூர், பாண்டூர், புத்தகரம், காளி, கடலங்குடி, திருச்சிற்றம்பல, முடிகண்டநல்லூர், திருவாளபுத்தூர், கடக்கம், வரதம்பட்டு, நந்ததோப்பு வரை வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த தொகுதியை பற்றி நன்கு அறிந்தவன், என்னென்ன தேவை என்பதை நான் உணர்வேன். தன்னம்பிகையிடன் களத்தில் இறங்கியுள்ளேன். என்னை எம்எல்ஏவாக தேர்ந்தெடுத்தால் இதுவரை நீங்கள் பார்த்திராத சட்டமன்ற உறுப்பினராக சுழன்று பணியாற்றுவேன் என்றார்.

Related Stories: