பரமக்குடி, ஏப். 3: பரமக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முருகேசனை ஆதரித்து நேற்று முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் பார்த்திபனூர், விளத்தூர், கஞ்சியனேந்தல், நயினார் கோவில் காரடர்ந்தகுடி ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மக்கள் மத்தியில் ராஜகண்ணப்பன் பேசியதாவது: பரமக்குடி தொகுதி திமுக வேட்பாளர் முருகேசன் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். உழைப்பால் உயர்ந்தவர். முருகேசனின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. அதேபோல் முதுகுளத்தூர், ராமநாதபுரம், திருவாடானை தொகுதிகளிலும் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி. கமிஷன், கலெக்சன், கரப்ஷன் இதுதான் அதிமுக ஆட்சி. திமுக சுயமரியாதையை காப்பாற்றும் கட்சி. திமுகவின் தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து திட்டங்களும் தமிழகத்தில் முழுமையாக நிறைவேற்றப்படும்.