ராமநாதபுரம், ஏப்.2: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என, ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் உறுதியளித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் மண்டபம் ஒன்றியத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் செய்தார். வேட்பாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தனது பிரசாரத்தில், திமுக தேர்தல் அறிக்கையில் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார். அதிமுக மகளிரணி மாவட்ட தலைவர் கலா உள்பட 10 க்கும் மேற்பட்ட பெண்கள், ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய அதிமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் சரவணன் திமுகவில் இணைந்தனர்.