திருவாரூர், மார்ச் 31: நன்னிலம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜோதிராமன் தொகுதிக்குட்பட்ட நன்னிலம் குடவாசல், வலங்கைமான் ஒன்றிய, பேரூராட்சி பகுதிகள் என அனைத்திலும் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள், மகளிர், மாணவர்கள், தொழிலாளர்கள் என அனைவரிடமும் தொடர்ந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று வண்டாம்பாளையம், நீலக்குடி, பண்ணைவிளாகம், சிமிலி, புதுக்குடி, மஞ்சக்குடி, மணப்பறவை, திருக்குடி உட்பட பல்வேறு ஊராட்சி கிராமங்களில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, திமுக ஆட்சி அமைந்தவுடன் நன்னிலம் அரசு மருத்துவமனையில் ரத்த வங்கி ஏற்படுத்தப்படும்.
