புதிய தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க விடமாட்டோம்: தேர்தல் அறிக்கையில் ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கான தமாகா தேர்தல் அறிக்கை யை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று கட்சி தலைவர் ஜி.ேக.வாசன் வெளியிட்டார். தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்டேஷ், முனவர் பாஷா, சக்திவடிவேல், கவிஞர் ரவி பாரதி, ஆர்.எஸ்.முத்து, மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், அண்ணாநகர் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள் வருமாறு:  பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம், தனியார் பள்ளிகளுக்கு புதிய அனுமதி வழங்காமல் நிறுத்திவிட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுப்போம்.

மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மோட்டார் பைக், கல்லூரி மாணவர்களுக்கு கார் ஓட்டும் பயிற்சி அளித்து லைசென்ஸ் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்துவோம். வீட்டு வேலை செய்யும் 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: