×

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினருக்கு ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு அணி விரிவாக்கம், புதிய பொறுப்புகள் ஒதுக்கீடு: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

 

சென்னை: சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தொடர்ச்சியாக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர். ஆனால், அவர்களுக்கு பொறுப்புகள் வழங்காமல் காலம் கடத்தி வந்தது தவெக தலைமை. இந்நிலையில், சமீபத்தில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து விலகித் தவெகவில் இணைந்தவர்களுக்கு தவெக ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழக வெற்றிக் கழகத்தின் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி விரிவாக்கம் செய்யப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள். தலைமை நிலையச் செயலக முதன்மைச் செய்தி தொடர்பாளர்கள் சிடிஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன், அணி பொறுப்பாளர் ராஜ்மோகன்; ஒருங்கிணைப்பாளர்கள் ரமேஷ், கேத்தரின்பாண்டியன், அனந்தஜித் மகியா; முதன்மைச் செய்தித் தொடர்பாளர்கள் வைகைச்செல்வன், வி.பி.கலைராஜன், சி.மகேந்திரன், ஓய்.ஜவஹர் அலி, வா.புகழேந்தி; தேசியச் செய்தித் தொடர்பாளர்கள் பெலிக்ஸ் ஜெரால்ட், எம்.சத்யகுமார், வீர விக்கினேஸ்வரன், தேன்மொழி பிரசன்னா, அமெரிக்கை வி. நாராயணன், சசிரேகா, பழ செல்வக்குமார், விவேக் கணநாதன்;

மாநிலச் செய்தித் தொடர்பாளர்கள் சிவகுமார், மு.ஞா.செ.இன்பா, ராவுத்தர் இப்ராஹிம், ஜெகதீசபாண்டியன், பி.கே.ஜெயக்குமார், சுந்தரசாமி, ஆர்.கே.ஜலீல், தேவகுமார், சவுந்தரராஜன்; மாநில வலைத்தள செய்தித் தொடர்பாளர்கள் தமிழன் ராகுல்காந்தி, தியாகராஜன், நரேஷ்குமார் ராஜேந்திரன்,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : TNA ,Vijay ,Chennai ,AIADMK ,
× RELATED அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பால் பரபரப்பு