×

தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை பொதுமக்களை சந்திப்பதில்லை: முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

சென்னை: தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை பொதுமக்களை சந்திப்பதில்லை, கருத்து கேட்பதில்லை அது சார்ந்த அதிகாரிகளிடமோ, அமைச்சர்களிடமோ ஆலோசிப்பதில்லை என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டியுள்ளார்.

அதுபோல் தோழமைக் கட்சி தலைவர்களின் கருத்துகளை நேரிலோ அல்லது பத்திரிக்கை வாயிலாகவோ அறிந்து அது சார்ந்த ஆலோசனைகளை அமைச்சர், அதிகாரிகளிடம் விவாதித்து தெரிவிக்கும் குறைந்த பட்ச நாகரிகம் கூட உங்களிடம் இல்லை CM சார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மற்றும் எதிர்க்கட்சி உட்பட பிற கட்சி தலைவர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமலும் மக்கள் நலன் சார்ந்த காவிரி, மேகதாது உயிர் பிரச்சனைகளையும் துச்சமென தூக்கி எறிந்து செல்லும் ஆணவப்போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது. அரசியலுக்கு வரும்போது நடிப்பை விட்டுவிட்டு வருகிறேன் என்று தம்பட்டம் அடித்தவர் பழைய நடிப்பு தொழிலின் நண்பர்களான நால்வரின் ஆலோசனையை பெற்று ஆட்சியிலும் நடித்து வருவது தமிழ்நாட்டுக்கு ஆபத்தானது CM சார் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

திங்கள் முதல் வெள்ளி வரை கோட்டைக்கு வருவதும் மாலையில் ஒரு ரீல் வெளியிடுவதும் பனையூருக்கு சென்று பதுங்கி கொள்வதும். வெள்ளி முதல் திங்கள் வரை மறைந்து விடுவதும் வாக்களித்த மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் என்பது உங்களுக்கு புரிகிறதா CM சார் .செய்த தப்புகளை எல்லாம் மறைப்பதற்கு RSS அரைக்கால் காக்கி டவுசர் அமைச்சரை வைத்து மிரட்டுவது உங்கள் ஆட்சிக்கு நல்லதல்ல CM sir என்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் தெரிவித்திருந்தார்.

Tags : Thaweka government ,Former ,Speaker ,Appavu ,Chennai ,
× RELATED ஆர்வத்துடன் வாங்க குவியும் மக்கள்...