போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீஸ் பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, குயின்ஸ் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டரூபா, பிரையன் லாரா ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டில், 90 ரன் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று தொடங்குகிறது. தொடரை வெல்ல வெஸ்ட் இண்டீசும், சமன் செய்ய பாகிஸ்தானும் வரிந்துகட்டுவதால் இப்போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
