×

பாகிஸ்தானுடன் 2வது டெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் நிதானம்

 

போர்ட் ஆப் ஸ்பெயின்: பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் நிதானமாக விளையாடி ரன் குவித்தது.குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் ம்தல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 239 ரன் குவித்தது.தேஜ்நரைன் சந்தர்பால் 15, பிராண்டன் கிங் 46, கவெம் ஹாட்ஜ் 10, அமிர் ஜாங்கூ 26, ஷாய் ஹோப் 29 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர்.ஜஸ்டின் கிரீவ்ஸ் 64 ரன் (125 பந்து, 8 பவுண்டரி), கேப்டன் ரோஸ்டன் சேஸ் 36 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

* அமெரிக்க பவுலருக்கு 8 ஆண்டு தடை

அபுதாபி டி10 போட்டித் தொடரில் விளையாடியபோது ஐசிசி விதிகளை மீறி சூதாட்டத் தரகர்களுடன் தொடர்பில் இருந்ததாக சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க சுழற்பந்துவீச்சாளர் அகிலேஷ் ரெட்டிக்கு 8 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : West Indies ,Pakistan ,Port of Spain ,Queen's Park Oval ,
× RELATED இந்திய கிரிக்கெட் அணியின் புதிய...