×

இலங்கை டெஸ்ட் தொடர் காயத்தால் பும்ரா விலகல்

புதுடெல்லி: இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடரில், முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முழங்கால் மூட்டு காயம் காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் காலே சர்வதேச அரங்கிலும் (ஆக.15-19), 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கொழும்பு பிரேமதாசா அரங்கிலும் (ஆக. 23-27) நடைபெற உள்ளன.

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முழங்கால் மூட்டு காயத்தால் அவதிப்பட்டு வரும் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா இலங்கை செல்லமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஏற்கனவே ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி காயத்தால் தேர்வு செய்யப்படாத நிலையில், வாஷிங்டன் சுந்தரும் முதல் டெஸ்டில் களமிறங்குவது கேள்விக்குறியாகி உள்ளது. பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Tags : Bumrah ,Sri Lanka Test ,New Delhi ,Jasprit Bumrah ,Sri Lanka ,Shubman Gill ,
× RELATED இந்திய கிரிக்கெட் அணியின் புதிய...