×

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க 20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 67,063 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 25,565 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் உள்ள உண்டியல்களில் பக்தர்கள் ரூ.4.81 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். 4.27 லட்சம் லட்டுகள் விநியோகிக்கப்பட்டது. 2.53 லட்சம் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியதால் பக்தர்கள் வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றவர்கள் சுமார் 8 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.

Tags : Tirupati Ezhumalaiyan ,Tirumala ,Lord ,
× RELATED காவிரி நீர் திறக்க எதிர்ப்பு, விஜய்...