×

பாஜ பெண் கவுன்சிலர் தற்கொலை

 

தென்காசி: தென்காசி புலிக்குட்டி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த முத்து கோபாலகிருஷ்ணன் மனைவி சுனிதா (45). நகராட்சி 23வது வார்டு பாஜ கவுன்சிலர். 2 மகள்கள் உள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சுனிதா மகளை கண்டித்த போது கணவர் கோபாலகிருஷ்ணன் ஆதரவாக பேசியிருக்கிறார். இதனால் சுனிதா மன விரக்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் சுனிதா நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வீட்டு மாடியில் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். அவரை கணவர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சுனிதா உயிரிழந்தார். இதுகுறித்து தென்காசி போலீசார் விசாரித்து வருகின்றனர். சுனிதா சென்னையிலுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : BJP ,Tenkasi ,Sunitha ,Muthu Gopalakrishnan ,Pulikutty Vinayagar Koil Street, Tenkasi ,
× RELATED வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளியில்...