×

தாமிரபரணியில் சுட்ட பானையோடு அஸ்தியை கரைக்க ஐகோர்ட் தடை

 

மதுரை: நெல்லை அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றின் பாபநாசம் படிக்கட்டில் அமைந்துள்ள ஆனந்த விலாஸ் மண்டபம் ஆக்கிரமிப்பு தொடர்பான மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் அளித்த உத்தரவில், ‘‘400 ஆண்டுகள் பழமையான கல் மண்டபத்தைச் சுவர்கள் எழுப்பி மாற்றியமைத்தது சட்டவிரோதம். எனவே, மனுதாரரை வெளியேறச் சொன்ன அதிகாரிகளின் நடவடிக்கை சரியானதே. தொன்மை வாய்ந்த தாமிரபரணி நதியை வெறும் ஆறு என்பதற்காக அல்லாமல், அது ஒரு தெய்வம் என்ற அடிப்படையில் அதற்குச் சட்டப்பூர்வ நபர் அந்தஸ்து வழங்கப்படுகிறது. ஆற்றை மாசுபடுத்த எவருக்கும் உரிமையில்லை. ஆற்றில் துணிகள் மற்றும் பிற பொருட்களைக் கொட்டுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

அதேவேளையில், ஆற்றில் அஸ்தியைக் கரைப்பது மத உரிமையின் ஒரு பகுதி என்பதால் அனுமதிக்கப்படுகிறது. ஆனால், அஸ்தியைக் கரைக்க சுடப்படாத மண் பானைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுட்ட பானையோடு வீச தடை விதிக்கப்படுகிறது. ஆற்றை தூய்மையாக வைத்திருக்க சிவில் சமூக உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புப் படையை அமைத்துக் காவல் துறையின் ஒத்துழைப்போடு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறியுள்ளனர்.

Tags : High Court ,Thamirabarani ,Madurai ,Justices ,G.R. Swaminathan ,P. Pugazhenthi ,Ananda Vilas Mandapam ,Papanasam ,Thamirabarani river ,Nellai Ambasamudram ,
× RELATED வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளியில்...