×

குப்பைகளாக காட்சி அளிக்கும் கொழுமம் அமராவதி ஆறு

உடுமலை : உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆறு வழியாக கரூர் வரை செல்கிறது.கொழுமம் அமராவதி ஆற்றுப்பாலத்தை கடந்து தண்ணீர் செல்கிறது. தற்போது ஆற்றில் குறைவாகவே தண்ணீர் செல்கிறது.

கொழுமம் பழைய பாலத்தின் அருகில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். மேலும், குளிக்கவும், துணி துவைக்கவும், திதி கொடுக்கவும் வருபவர்கள் துணிகளை விட்டுச் செல்கின்றனர்.

இதனால் அப்பகுதியில் குப்பைமேடாக காட்சி அளிக்கிறது.கழிவுகளை அகற்றி, புதர்களை வெட்டி அகற்றினால் ஆற்றில் தண்ணீர் சீராக செல்லும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kolomam Amravati River ,Udumalai ,Amravati Dam ,Udumala ,Karur ,Colombo Amravati ,Colombo ,
× RELATED ஜனநாயகன் திரைப்பட கொண்டாட்டத்திற்காக...