- பள்ளபட்டி அரசு பள்ளி
- அரவக்குறிச்சி
- பல்லப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள்
- கரூர்
- மட்டம்
- அரவகுச்சி
அரவக்குறிச்சி : கரூர் மாட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளபட்டி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவிகள் சாம்பியன் பட்டம் பெற்று சாதனை ஒன்றிய அளவிலான கபடி போட்டி தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் அரவக்குச்சி ஒன்றிய அளவிலான பள்ளிகள் பங்கு பெற்றன. இதில் 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பள்ளபட்டி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணியினர்.
அரசு உயர்நிலைப்பள்ளி சௌந்தராபுரம் பள்ளி அணியினரை எதிர்கொண்டு விளையாடி, 27: 8 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர். 14 வயதுக்குட்பட்ட பிரிவில் அரவக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி அணியினை எதிர்கொண்டு 24 : 27 என்ற புள்ளி கணக்கில் இரண்டாம் இடம் பிடித்தனர். இதே போல் 19 வயது உட்பட்ட பிரிவிலும் பெண்கள் அணியினர் முதலிடம் பிடித்தனர்.
இரண்டு வெற்றிகளை பெற்றதால் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்றவர்களை பள்ளப்பட்டி எஜுகேஷன் சொசைட்டியின் நிருவாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமையாசிரியர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
