- திருவெட்டியூர் கோயில்
- திருவாடானை
- திருவெட்டியூர் பாகம்பிரியாள் கோவில்
- பாகம்பிரியாள் சமேத வால்மீகநாத சுவாமி கோவில்
- திருவெட்டியூர்
- திருவாடானை…
திருவாடானை, ஜூலை 29: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் ஆபத்தான நிலையில் உள்ள திறந்த வெளி மண்டபத்தை இடித்து விட்டு, புதிதாக கட்ட பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் புகழ்பெற்ற பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
குறிப்பாக, இக்கோயிலைப் பொறுத்தமட்டில் இரவில் தங்கி வழிபாடு செய்வதைச் சிறப்பாகக் கருதி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து தங்கி சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இத்தகைய சிறப்புமிக்க கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. பக்தர்களின் காணிக்கைக்காகக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள 8 உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு எண்ணப்படும் போது சுமார் 20 முதல் 30 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.
