×

எச்ஐவி விழிப்புணர்வு பிரசாரம்

 

சங்ககிரி, ஜூலை 29: சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிர்வாகம் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை ஐசிடிசி மையம் இணைந்து, சேலம் கோதாவரி கலைக்குழுவினர் மூலம், சங்ககிரி நகராட்சிக்குட்பட்ட அன்னதானப்பட்டி மற்றும் இருகாலூர் ஊராட்சி பகுதிகளில் எச்ஐவி, பால்வினை நோய்கள் மற்றும் தனிநபர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அன்னதானப்பட்டி ஊராட்சி செயலர் மேகலா மற்றும் இருகாலூர் ஊராட்சி செயலர் மாசிலாமணி ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய குழுவினர், சேலம் மாவட்ட கிராம மறுசீரமைப்பு மேம்பாட்டுத்திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு எச்ஐவி தடுப்பு, பாதுகாப்பான வாழ்க்கை முறை மற்றும் சுகாதார விழிப்புணர்வு குறித்து கலைநிகழ்ச்சிகள் வாயிலாக எடுத்துரைத்தனர்.

Tags : Sangakiri ,Salem District AIDS Control Administration ,Sangakiri Government Hospital ICDC Centre ,Salem Godavari Artistic Committee ,Balvi ,Andanapatti ,Biakalur Orati ,Sangakiri Municipality ,
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு உரிமை வழங்கல் முகாம்