×

மதுரவாயல் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆணைக்கிணங்க, திருவள்ளுர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில், புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபான கடையை உடனடியாக மூடக்கோரி நெற்குன்றம் என்டி.படேல் சாலையில் உள்ள அம்மா உணவகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பூவை நகராட்சி கவுன்சிலர் கே.எஸ்.ரவிசந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ இரா.மணிமாறன், மாவட்ட நிர்வாகிகள் தி.ப.கண்ணன், கா.சு.ஜனார்த்தனம், காட்டுப்பாக்கம் கே.ஜி.திருநாவுக்கரசு, ராஜா என்கிற பேரழகன், விஜயலட்சுமி ஜெயபால், புலவர் ரோஜா, பொதுக்குழு உறுப்பினர் காட்டுப்பாக்கம் கே.ராஜகோபால், எம்.எஸ்.அருள்யுகா, ஜெ.வனிதா ஒன்றிய, நகர, பகுதி, வட்ட செயலாளர்கள் கே.ஜி.டி.கவுதமன், புட்ளூர் ஆர்.சந்திரசேகர், பெருவை பி.சீனிவாசன், பூங்கோவன், எம்.மகேந்திரன், ஏ.தேவதாஸ், இம்மானுவேல், இ.கந்தன், பி.ஜெயபால், கே.தாமோதரன், எம்.எம்.மூர்த்தி, டி.எம்.ரமேஷ், அபிஷேக் ஜேக்கப், சல்மான் ஜாவித், டி.எச்.நவாஸ், டாக்டர் எம்.ஜி.பிரேம் குமார், இரா.காவேரி, பா.நாகராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர், மாநகராட்சி கவுன்சிலர் டி.சத்தியநாதன் வரவேற்றார்.

இதில், அதிமுக செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா கண்டன உரையாற்றினார். இதில் முன்னாள் எம்பி எஸ்.ஜெகந்நாதன், அணிகளின் மாவட்ட செயலாளர்கள் கே.வைதியநாதன், சி.சார்லஸ், கே.சதீஷ்குமார், ஜெ.ரவீந்திரநாத், காமதேனு ராஜேந்திரன், அந்தமான் கே.முருகன், நேமம் யு.ராகேஷ், எஸ்.கோபிநாத், பி.கார்ல் மார்க்ஸ், டாக்டர் வி.பாலாஜி, சி.கே.பாலாஜி, ஜெ.துரைராஜ், டி.பத்மநாபன், எம்.ஆனந்தன், பூவை ஞானம், என்எஸ்ஜெ.பிரேம்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tasmak ,Madurai ,Mudakori ,THIRUVALLUR ,SECRETARY GENERAL ,FORMER CHIEF ,MINISTER ,TAMIL NADU ,EDAPADI K. Palanisami Commission ,Thiruvallur Central District Authority ,Government Liquor Store ,Nakhunram ,Nt ,Patel Road ,
× RELATED வாசீஸ்வரர் கோவில் புனிதத்தைக்...