×

செந்தில்பாலாஜி சகோதரர் கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்

கரூர்: வருமான வரித்துறை அதிகாரியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு கடந்த மாதம் ஜூன் 26ம்தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முன்ஜாமீன் வழங்கியது. அவர் சனிக்கிழமை தோறும் கரூர் நகர காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டது.

அதேநேரம் தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டி இருப்பதால், கரூர் நகர காவல் நிலையத்திற்கு பதிலாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட அனுமதி கோரி அசோக்குமார் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட விரைவு நீதிமன்றத்தில், அசோக்குமார் நேற்று வழக்கறிஞர்களுடன் நீதிபதி மகேஷ் முன் ஆஜராகி சென்னை காவல் நிலையத்தில் கையெழுத்திடும் உத்தரவுக்கான நகலை பெற்றுச் சென்றார்.

Tags : Senthil Balaji ,Karur ,Ashok Kumar ,Madras High Court ,Madurai ,
× RELATED பழநி நில முறைகேட்டில் சஸ்பெண்ட் ஆன...