- உயர்நீதிமன்றத்தில்
- தமிழ்நாடு அரசு
- சென்னை
- மதிமுக
- பொதுச்செயலர்
- வைகோ
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நீதிபதிகள்
- என். சதீஷ்குமார்
- டி. பரத சக்ரவர்த்தி
சென்னை: தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜராகியிருந்த வைகோ, விவசாயிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து ஆண்டிப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் சீமை கருவேல மரங்களை அகற்றினோம்.
சில இடங்களில் வருவாய்த் துறை அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்ற ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.மரங்களை அகற்ற அனுமதி கோருவோருக்கு 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நிலங்களில் வளர்ந்திருந்த கருவேல மரங்கள் 90 சதவீதம் அகற்றப்பட்டுவிட்டன. வட மாவட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், வருவாய் துறை செயலாளரை நோடல் அதிகாரியாக நியமிக்கிறோம். ஜூலை 31ம் தேதி அவர் நேரில் ஆஜராகி தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும். சீமை கருவேல மரங்களை அகற்ற தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும். அரசு நிலங்களில் சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி கோரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் வருவாய் துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
