- காமன்வெல்த் விளையாட்டு
- புடிஜினா
- அலி இமாம்
- பாரா நீச்சல் இறுதிப் போட்டி
- ஸ்ரீஹரி நடராஜ்
- கிளாஸ்கோ
- இந்தியா
- கார்த்திக் புடிகினா
- பாரா நீச்சல் ஆண்கள் 100மீ ஃப்ரீஸ்டைல்
- பாரா நீச்சல்
- கிளாஸ்கோ, ஸ்காட்லாந்து…
கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரின் பாரா நீச்சல் ஆண்கள் 100 மீ. ஃபிரீஸ்டைல் பிரிவு பைனலில் பங்கேற்க இந்தியாவின் கார்த்திக் புதிகினா, அலி இமாம் தகுதி பெற்றனர். ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் பாரா நீச்சல் ஆண்கள் 100 மீ. பட்டர்பிளை எஸ்13 ஹீட் 1ல் நேற்று களமிறங்கிய புதிகினா 57.10 விநாடியில் பந்தய தூரத்தைக் கடந்து 3வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார்.
இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் அலி இமாம் (1 நிமிடம், 05.32 விநாடி) இறுதிப் போட்டிக்கான 8வது இடத்தை பிடித்துள்ளதால், இந்த பிரிவில் இந்தியாவுக்கு பதக்க நம்பிக்கை தக்கவைக்கப்பட்டுள்ளது. ஆண்கள் 50 மீ. பிரெஸ்ட் ஸ்ட்ரோக் நீச்சல் தகுதிச் சுற்றில் பங்கேற்ற இந்திய நட்சத்திரம் ஸ்ரீஹரி நடராஜ் 25.52 விநாடியில் பந்தயதூரத்தைக் கடந்து 5வது இடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.
துலிகா மான் சஸ்பெண்ட்: இந்திய ஜூடோ வீராங்கனை துலிகா மான், கடந்த ஓராண்டு காலத்தில் 3 முறை தான் தங்கியிருக்கும் இடம் குறித்த தகவலை முறைப்படி அறிவிக்காததால் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை என்ஏடிஏ அறிவித்துள்ளது. பர்மிங்காம் காமன்வெல்த் போட்டியின் மகளிர் 78 கிலோ எடை பிரிவில் இவர் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஜூடோ வீரர் அருண்குமார் (-73 கி.) ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால் காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகிய நிலையில், துலிகா மான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது இந்திய ஜூடோ அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. டெல்லியில் இருந்து நாளை மறுநாள் கிளாஸ்கோ செல்லும் இந்திய ஜூடோ அணி, ஜூலை 31ல் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
