×

சீனா ஓபன் பேட்மின்டன் போராடி தோற்றார் சிந்து

பெய்ஜிங்: சீனா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில்,இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கடுமையாகப் போராடி தோற்றார். முதல் சுற்றில் சக வீராங்கனை உன்னட்டி ஹூடாவை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறி இருந்த சிந்து, நேற்று உள்ளூர் நட்சத்திரம் சென் யூபெய் (4வது ரேங்க்) சவாலை சந்தித்தார். தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சென் யூபெய் 12-6 என முன்னிலை வகித்தாலும், அதன் பிறகு அதிரடியாக புள்ளிகளைக் குவித்து முன்னேறிய சிந்து 21-16 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார்.

2வது செட்டிலும் சிந்து 20-16 என வெற்றியின் விளிம்பைத் தொட்டாலும் 4 மேட்ச் பாயின்ட்களை வீணடிக்க… 22-20 என வென்ற சென் யூபெய் சமநிலை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து, 3வது செட்டிலும் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன வீராங்கனை 16-21, 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

சிறப்பாக விளையாடியும் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட சிந்து ஏமாற்றத்துடன் வெளியேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும் இந்திய வீரர்கள் லக்‌ஷியா சென், ஆயுஷ் ஷெட்டி தோல்வியைத் தழுவியதை அடுத்து, பிடபுள்யூஎப் சூப்பர் 1000 அந்தஸ்து தொடரில் இந்தியாவின் பதக்க வேட்டை முடிவுக்கு வந்தது.

Tags : Sindhu ,China Open badminton ,Beijing ,PV ,Unnatty Hooda ,
× RELATED ஜிம்பாப்வேயுடன் முதல் டி20 எளிதாக வென்றது இந்தியா